Saturday, April 19, 2025

”உங்க சுயநலத்துக்காக எங்கள” BCCIக்கு எதிராக அணிகள் ‘போர்க்கொடி’

IPL உலகின் அதிகம் பணம் கொழிக்கும் கிரிக்கெட் தொடராகத் திகழ்கிறது. இது கிரிக்கெட்டை அழிப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. அதிக ரசிகர்களை வைத்திருப்பதால், BCCIயின் காதில் இந்த குற்றச்சாட்டுகள் விழுவதில்லை.

ஆனால் நடப்பு தொடரில், BCCIயின் அராஜகம் ரொம்பவும் அதிகமாகி இருக்கிறது. இதனால் IPL அணிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. குறிப்பாக ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக ‘தார் ரோடு’ போல உருவாக்கப் படுகின்றன.

இதனால் பவுலர்கள் நிலைமை நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. அதிக ரன்கள் அடிக்கப்பட்டால் விளம்பரம் தொடங்கி டிக்கெட் விற்பனை வரை, அனைத்திலுமே காசு கொட்டும். இதை பிடித்துக்கொண்டு BCCIஐ பவுலர்களை பலி கொடுக்க ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில் BCCIயின் இந்த விதி காரணமாக சொந்த மைதானங்கள் கூட தங்களுக்கு சாதகமாக இல்லை என்று அணிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. நடப்பு சாம்பியன் கொல்கத்தா தொடங்கி லக்னோ, சென்னை அணிகள் வரை, இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்து உள்ளன.

அந்த வரிசையில் பெங்களூரு அணியும் இணைந்துள்ளது. RCB ஆலோசகர் தினேஷ் கார்த்திக், ” சொந்த மைதானத்தில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளோம். சின்னச்சாமி மைதானம் எங்களுக்கு ஏற்றதாக இல்லை.

மைதான பராமரிப்பாளரிடம் பேட்டிங்கிற்கு ஏற்றதாக தயார் செய்ய சொன்னேன். ஆனால் பவுலிங்கிற்கு ஏற்றாற்போல தயார் செய்து விட்டார்,” இவ்வாறு தினேஷ் ஓபனாக பேசியிருக்கிறார். நடப்பு IPL தொடரில் BCCI ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு திரி கொளுத்திப் போட்டுள்ளது.

இதை அனைத்து அணிகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்குமா? இல்லை, மொத்தமாக BCCIயிடம் சரண்டராகி விடுமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest news