Sunday, February 23, 2025

ஹிந்தி கவிதை சொல்லாததால் 3ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை சஸ்பெண்ட்

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி விஷ்யாஷ்ரம் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவனை ஹிந்தி கவிதை சொல்லுமாறு ஆசிரியை கூறியுள்ளார்.

அதற்கு அந்த மாணவன் தடுமாறியதால் அந்த ஆசிரியை மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் பள்ளிக்குள் நுழைய விடமாட்டேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் இந்தி ஆசிரியை பத்மலட்சுமியை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Latest news