Wednesday, July 30, 2025

மேஜை மேல் கால் வைத்து குறட்டை விட்டு தூங்கிய பள்ளி ஆசிரியர்

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில், ஆசிரியர் வி.கே. முண்டே மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது மாணவர்களிடம் பாடத்தை படியுங்கள் என்று கூறிவிட்டு, சேரில் அமர்ந்தபடி தூங்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் ஆசிரியர் சேரில் அமர்ந்து, மேஜையில் கால்களை தூக்கி வைத்தபடி குறட்டை விட்டு தூங்கிய காட்சி உள்ளது. வீடியோ எடுக்கும் நபர் ஆசிரியர் எவ்வளவு நேரமாக தூங்குகிறார் என கேட்க, மாணவன் ஒருவன் சுமார் அரை மணி நேரமாக தூங்குகிறார் என்று பதிலளிக்கிறார்.

இச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மண்டல கல்வி அதிகாரி சதீஷ் ஷிண்டே, அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News