Thursday, March 20, 2025

பள்ளி மாணவியை போட்டோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த சிவக்குமார் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், ஒரு மாணவியுடன் நெருக்கமாக நின்று செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். பின்னர் அந்த போட்டோவை தினமும் காட்டி, நீ அழகாய் இருக்கிறாய் என்று அடிக்கடி கூறி, மாணவியை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, ஆசிரியரின் செல்போனை பிடுங்கி போட்டோக்களை அழித்ததுடன், இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கண்ணீருடன் புகார் கூறியுள்ளார். இது குறித்து தலைமை ஆசிரியர் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை செய்து, தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் சிவகுமார் மீது ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சிவகுமாரை கைது செய்து, சேலம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Latest news