Sunday, February 23, 2025

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

தென்காசி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக டேவிட் மைக்கேல் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தனது பள்ளியில் பயிலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து அந்த ஆசிரியர் மருத்துவ விடுப்பில் சென்று தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியர் டேவிட் மைக்கேலை தேடி வந்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரியில் பதுங்கி இருந்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Latest news