இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தனது ஊழியர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சுமார் 80 சதவீத ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டாடா குழும ஐடி நிறுவனம், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், சம்பள உயர்வு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் 80 சதவீத ஊழியர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் பணியாளர்களில் சுமார் 2 சதவீதம் பேர் அல்லது சுமார் 12,261 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களாக இருப்பவர்கள் ஆவர்.