Sunday, December 7, 2025

தட்கல் டிக்கெட் புக்கிங் : இப்படி செஞ்சா சீட் கட்டாயம் கிடைக்கும்!

ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது பெரும்பாலும் சீட்டுகள் கிடைக்காமல் வெய்ட்டிங் லிஸ்ட் வந்து விடுகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் பெறுவது கடினம். காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு துவங்கும் உடனே நிமிடங்களில் தான் டிக்கெட் முடிந்து விடுகின்றன.

கடைசி நிமிடத்தில் பயண திட்டமிடும் பயணிகளுக்கு தட்கல் டிக்கெட் தான் ஒரே நம்பிக்கை. அதிலும் டிக்கெட் பெற விரும்பினால் வேகம் மற்றும் சரியான முயற்சி அவசியம்.

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய சில முக்கிய விஷயங்களை மனதில் வைத்து முயற்சி செய்தால் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும்.

டிக்கெட் புக்கிங் தொடங்கும் நேரம் வேறுபடுகிறது. ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கு, ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு தொடங்கி, 10% முதல் 30% வரை மட்டுமே தட்கல் சீட்டுகள் வழங்கப்படும். முக்கிய வழித்தடங்களில் இவை நொடிகளில் முடிவடையும். அதனால் தட்கல் முன்பதிவு வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்ய வேண்டும்.

உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் பெற சில வழிகள் உண்டு. முன்பதிவு ஆரம்பிக்கும் 9:59 நிமிடத்திற்கு முன்பே தயார் ஆக வேண்டும். IRCTC இணையதளத்தில் ‘மாஸ்டர் லிஸ்ட்’ என்ற வசதியை பயன்படுத்தி பயணிகளின் தகவல்களை ஒருமுறை சேமிக்கலாம். பின்னர் டிக்கெட் புக்கிங் நேரத்தில் அந்த மாஸ்டர் லிஸ்டிலிருந்து பயணிகளை தேர்ந்தெடுக்க முடியும். இதனால் விவரங்கள் தானாகவே நிரப்பப்படும் மற்றும் நேரம் மிச்சமாகும்.

பணம் செலுத்தும் போது தாமதிக்கக்கூடாது. சிறந்த விருப்பம் UPI என்பதுதான். கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை உள்ளிட 30 வினாடிகள் கூட அதிகம். அதன்போதும் IRCTC eWallet அல்லது UPI சேவை மூலம் பணம் முன்கூட்டியே தயார் வைத்திருக்க வேண்டும். இதனால் ஒரு கிளிக்கில் பணம் செலுத்த முடியும் மற்றும் டிக்கெட் பிடிக்கும் வாய்ப்பு பெருகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News