மின்சார கார்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்த டாடா நிறுவனம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய மின்சார கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது மின்சார கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.3.8 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் பிப்ரவரி மாதம் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெக்ஸான் (Nexon)

நெக்ஸான் (Nexon) மின்சார கார்கள் மீது அதிகபட்சமாக ரூ.1.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட சாசிஸ் மாடல் கார்களுக்கு அதிக சலுகை கிடைக்கும். அதே நேரத்தில், 2026ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நெக்ஸான் மின்சார கார்களுக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டியாகோ (Tiago)

டியாகோ (Tiago) மின்சார கார்கள் மீது டாடா நிறுவனம் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது. டாடாவின் மலிவு விலை மின்சார கார்களில் டியாகோ முக்கியமான ஒன்றாகும். இதில் 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட சாசிஸ் மாடல் கார்களுக்கு ரூ.1.5 லட்சம் தள்ளுபடி கிடைக்கிறது. 2026ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடல்களுக்கு ரூ.60,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹேரியர் (Harrier)

ஹேரியர் (Harrier) டாடாவின் உயர்தர மின்சார கார் மாடலாகும். இதில் 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட அனைத்து மாடல்களுக்கும் ரூ.1.5 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் லாயல்டி போனஸ் சலுகையும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்ச் (Punch)

பன்ச் (Punch) மின்சார கார்கள் மீது 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட சாசிஸ் மாடல்களுக்கு ரூ.1.6 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பன்ச் மாடல் கார்களுக்கு ரூ.90,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்வ் (Curvv)

கர்வ் (Curvv) மின்சார கார்கள் மீது டாடா நிறுவனம் அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த மாடல்களுக்கு ரூ.3.8 லட்சம் வரை சலுகை வழங்கப்படுகிறது. 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட சாசிஸ் மாடல் கார்களுக்கு ரூ.3.3 லட்சம் தள்ளுபடி கிடைக்கிறது.

2026ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு ரூ.2.8 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், சில குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூ.3.8 லட்சம் வரை முழு தள்ளுபடி கிடைக்கும் என்றும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News