Monday, December 29, 2025

டாஸ்மாக் சோதனை வழக்கு : தொடர்ந்து சோதனை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்திய சோதனை சரியானதுதான். அதற்கு தடை விதிக்க முடியாது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related News

Latest News