டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது : நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்குமாறு வலியுறுத்தினேன். தமிழ்நாட்டுக்கு என்னென்ன தேவை என்பதை கூட்டத்தில் பேசினேன். கோவை. மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வலியுறுத்தினேன்.
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். இலங்கை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் என வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.