Friday, July 4, 2025

“எவ்வளவு நல்லது செய்தாலும் குற்றம் சொல்கிறார்கள்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த வேலப்பன் சாவடியில் உள்ள பாஜக அலுவலகத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்துகொண்டு சந்தித்தார் அப்போது அவர் அளித்த பேட்டியில் :

காங்கிரஸ் அல்லாமல் தொடர்ந்து ஒரு பிரதமர் ஆட்சி செய்கிறார் என்ற பெருமையை மோடி பெற்றிருக்கிறார்.

2007ல் வேலை இல்லா திண்டாட்டம் 7 சதவீதமாக இருந்தது. தற்போது மூன்று சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் எவ்வளவு நல்லது செய்தாலும் அதனை பாராட்டாமல் அதனை குற்றம் சொல்லும் மன நிலையில் முதல்வர் மற்றும் அதன் கூட்டணியினர் உள்ளனர்.

எல்லா மொழிகளும் பேசக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வரக்கூடிய பாராளுமன்றத்தில் தமிழின் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.

கீழடியை வைத்துக்கொண்டு அதன் தொன்மையை மறைப்பதற்கு பாஜக முயற்சி செய்து வருவதாக பொய்யான குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள். பாஜக வந்த பிறகுதான் கீழடி அகழ்வாராய்ச்சி ஆரம்பித்தார்கள்

கீழடி அகழ்வாராய்ச்சி உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றதற்கு மத்திய அரசு தான் காரணம்.

எங்கெல்லாம் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லையோ அந்த அரசாங்கம் வீட்டிற்க்கு செல்ல வேண்டிய அரசாங்கம்

புதிய கல்வி கொள்கை, கீழடி என எல்லாவற்றையும் அரசியலாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுயள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news