Tuesday, April 29, 2025

‘தமிழக’ வீரருக்கு மறுக்கப்படும் வாய்ப்பு.. டெல்லி பயிற்சியாளர் ‘வித்தியாச’ விளக்கம்

நடப்பு IPL தொடர் சண்டைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் குறைவில்லாமல் சென்று கொண்டுள்ளது. முதல் அணியாக Play Off ரேஸில் இருந்து CSK வெளியேற, இதுவரை கோப்பை வெல்லாத டெல்லி, பெங்களூரு அணிகள் கெத்து காட்டி வருகின்றன.

அக்சர் படேல் தலைமையில் டெல்லி அபாரமாக செயல்பட்டாலும், 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழ்நாடு வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்க மறுக்கிறது. இது மிகப்பெரும் மர்மமாக இருக்கிறது என ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் கெவின் பீட்டர்சன் நடராஜன் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், ”தற்போது உள்ள பிளேயிங் லெவன் அணியில் எந்த இடத்தில் நடராஜனை கொண்டுவர முடியும்? என்று நீங்களே சொல்லுங்கள்.

நெட் பயிற்சியில் நடராஜன் அபாரமாக செயல்படுகிறார். அவருக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால் எப்போது என்பதை என்னால் சொல்ல முடியாது,”என்று, வித்தியாசமாக ஒரு விளக்கத்தினை அளித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” அப்புறம் எதுக்கு அவரை இவ்வளவு தொகை கொடுத்து எடுத்தீங்க?,” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Latest news