Monday, December 29, 2025

போதைப் பொருள் ஒழிப்பில் தமிழ்நாடுதான் சிறந்த மாநிலம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது : “அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநிலம் முழுவதும் குட்கா மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருந்தது. உயர் பதவியில் இருந்த சில காவல் அதிகாரிகள் கூட சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது தமிழக அரசு 96 ஆயிரம் கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. போதைப்பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த மாநிலமாக உள்ளது. குட்கா விற்கும் கடைகளை மூடி வருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

Latest News