UPSC தேர்வை எழுதுவதை கனவாக நினைத்திருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு வந்துள்ளது!
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், UPSC முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை, பத்து மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இது எந்தவொரு கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும் உதவித்தொகை. 2026 UPSC தேர்வுக்காக அரசு நேரடியாக தேர்வர்கள் தேர்வு செய்ய, மதிப்பீட்டுத் தேர்வு ஒன்று நடத்தப்பட இருக்கிறது.
இந்த முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.25000 வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த தேர்வு ஜூலை 26, 2025 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு முழுக்க ஆங்கிலத்தில் இருக்கும்.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் தேர்வுத் மையங்கள் அமைக்கப்படும். தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூலை மூன்றாம் வாரத்தில் வெளியிடப்படும்.
அதற்குள், இந்த ஊக்கத்தொகைக்கான விண்ணப்ப அவகாசம் ஜூலை 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், cms.tn.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் UPSC முதன்மை தேர்வுக்கு செல்வதற்கான பயிற்சியுடன் ஊக்கத்தொகையும் பெறுகிறார்கள்.
கடந்த 2024 மற்றும் 2025 ஆண்டுகளில், இந்த திட்டத்தின் பயனாளிகளில் இருந்து முறையே 276 மற்றும் 315 மாணவர்கள், UPSC முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!
வயது வரம்பு என்று பார்த்தால்,
பொது பிரிவிற்கு 32 வயது,
பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவிற்கு 35,
எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏக்கு 37,
மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயது வரை அனுமதிக்கப்படுகிறது.
மேலும், விண்ணப்பிக்கும் நபர், 01.08.2025 தேதிக்குள் குறைந்தபட்சம் 21 வயதாக இருக்க வேண்டும்,முக்கியமாக ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இது போன்ற அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்! நீங்கள் கனவு காணும் சிவில் சர்வீஸ் அதிகாரியாக மாற, இந்த திட்டம் ஒரு பெரிய படிக்கட்டு ஆகலாம்!