அரசு சேவைகளை மக்கள் வாட்ஸ்-ஆப் மூலம் பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசு-மெட்டா நிறுவனத்துக்கு இடையே கையெழுத்தாகி உள்ளது.
தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகள் மிக விரைவாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தபடியே தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகளைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் முதற்கட்டமாக இந்த சேவை வழங்கப்படுகிறது. மின் மற்றும் குடிநீர் கட்டணங்கள், வரி, ரேஷன் கார்டு, அரசு பேருந்து டிக்கெட், மெட்ரோ டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே சாட்பாட்டின் மூலம் பெறலாம்.