பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கள் மற்றும் செந்தில் பாலாஜியின் வழக்கு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வகித்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைப்படி, அமைச்சரவை இலாகாவை மாற்றி ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது.