புதுச்சேரி கடற்கரை சாலையில் மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை (27-05-2025) சர்வதேச யோகா மஹோத்சவ் திருவிழா நடைபெற உள்ளது. இதில் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்கான விளம்பர பேனர்கள் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.