ஜப்பானின் ஆளும் கட்சி லிபரல் டெமோகிராடிக் பார்டி (LDP), கட்சியின் புதிய தலைவராக சனாயே டகாய்ச்சியை (வயது 64) கடந்த சனிக்கிழமை தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம், ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பு டகாய்ச்சிக்கு உருவாகியுள்ளது.
ஜப்பானின் தற்போதைய பிரதமர் ஷிகெரு இஷிபா, எதிர்வரும் அக்டோபர் 15-ஆம் தேதி பதவி விலக உள்ளார். அந்த நாளில் பாராளுமன்றத்தில் புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நடைபெறும். பெரும்பான்மை இருக்கைகள் LDP கட்சியிடம் இருப்பதால், டகாய்ச்சி பிரதமராக வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கருதப்படுகிறது.