Wednesday, February 5, 2025

75,378 ரூபாய் பில்..ஒரே ஆர்டரில் Swiggyயை தூக்கி சாப்பிட்ட நபர்!

2022ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதை அடுத்து, இந்த வருடத்தில் தனது டாப் customerகளின் பில் தொகையை வெளியிட்டுள்ளது பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Swiggy.

அதன்படி, பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் 75,378 ரூபாய் மதிப்புள்ள single ஆர்டர் செய்து இந்த வருடத்தின் டாப் customer இடத்தை பிடித்துள்ளார்.

அடுத்தபடியாக, பூனேவை சேர்ந்த ஒருவர் 71,229 ரூபாய்க்கு ஆர்டர் செய்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும், பெங்களூருவை சேர்ந்த ஒருவர், ஒரே வாரத்தில் 118 ஆர்டர்களை செய்து கவனம் ஈர்த்துள்ளார். 2022ஆம் ஆண்டின் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி ஆகும்.

கடந்த வருடத்தில் ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் ஒரு நிமிடத்திற்கு 137 பிரியானிகள் ஆர்டர் செய்ய்யப்படடுள்ளது. இந்தியர்கள் ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்யும் உணவாக பிரியாணி ஏழாவது ஆண்டாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news