Thursday, September 4, 2025

விஜய் மாநாட்டுக்கு சென்றவர் உயிரிழப்பில் சந்தேகம் – உறவினர்கள் புகார்

விஜய் மாநாட்டுக்கு சென்றவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு 20ஆம் தேதி சென்ற நிலையில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே 27-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த மதனின் சகோதரர் சீனிவாசன் வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News