இந்திய ஒரு நாள் அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, அலெக்ஸ் கேரியை தனது அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டமிழக்க செய்தார் ஸ்ரேயாஸ் ஐயர். கேட்ச்சை பிடிக்கும் போது இடுப்பு பகுதியில் காயமானது. இதனையடுத்து அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு உட்புற ரத்தப்போக்கு கண்டியறியப்பட்டதை அடுத்து, ICU-விற்கு மாற்றப்பட்டிருந்தார். இது தொடர்பாக BCCI வெளியிட்ட அறிக்கையில், “ஸ்ரேயாஸ் ஐயரின் ஸ்கேன் பரிசோதனை முடிவில், அவரது மண்ணீரலில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் தற்போது நலமாக இருப்பதுடன், காயத்தில் இருந்து குணமடைந்தும் வருகிறார். மேலும், BCCI மருத்துவக் குழு அவரது காயத்தின் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்து.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை இந்திய T20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய யாதவ், “ஸ்ரேயஸ் ஐயர் தற்போது நலமாக இருக்கிறார். கடந்த இரண்டு தினங்களாக நான் அவருடன் பேசி வருகிறேன். அவர் தற்போது குணமடைந்து வருவதால், மேலும் சில நாள்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். அதனால் எந்த ஆபத்தும் இல்லை” என்று கூறியுள்ளார். இந்த அப்டேட் இந்திய ரசிகர்களை ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர்.
இருப்பினும் அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய மேலும் சில காலம் ஆகும் என்பதால், எதிர்வரும் தென் ஆப்பிரிக்க தொடரில் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்ன நடக்க போகிறது என்று!
