இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற அடிப்படை உணவு பொருட்களை மக்களுக்கு அரசு வழங்குகிறது.
தற்போது, மத்திய அரசிடம் 6 கோடியே 61 லட்சத்து 70 ஆயிரம் டன் கோதுமை மற்றும் அரிசி இருப்பு உள்ளது. இந்த அளவு ஆண்டு முழுவதும் நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலிருந்தும் விநியோகிக்கப்படும் மொத்த தானியங்களை விட அதிகம் ஆகும்.
தற்போது கொரோனா சமயத்தில் வழங்கப்பட்டதைப் போல, மூன்று மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை ஒரே மாதத்தில் வழங்க அரசு ஆலோசித்துள்ளது.
இந்த முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைக்கு அலையும் சிரமம் இதன் மூலம் குறையும்.