கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்ச டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டும் 13 கோடு ரூபாயை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.