Thursday, February 5, 2026

மீண்டும் ரிலீஸ் ஆகிறது சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’ திரைப்படம்

கடந்த 2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘மௌனம் பேசியதே’. த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது ரீ-ரீலிஸ் செய்யப்பட உள்ளது. அதன்படி, காதலர் தினத்தை ஒட்டி வரும் பிப்ரவரி 13 அன்று வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News