Wednesday, March 26, 2025

சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீமான் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது. மேலும், வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்கவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, தன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை கோரி, சீமான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார் வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Latest news