Wednesday, December 17, 2025

டெல்லி பொதுப்பணித்துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தின் Gate F வெளியே உள்ள சாக்கடையை, பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி, வெறும் கைகளால் சுத்தம் செய்ய தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது. வீடியோ சான்றுகளுடன் அளிக்கப்பட்ட புகார், நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோர்ட்டின் வழிகாட்டுதலை மீறியதாக எச்சரித்ததுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பொதுப்பணி அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் அபராதத்தை 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related News

Latest News