Tuesday, February 10, 2026

மாற்று கட்சிக்கு தாவும் ஆதரவாளர்கள்., காலியாகும் ஓ.பி.எஸ் கூடாரம்?

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற முழக்கத்தை முன்வைத்து அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். இந்த சூழலில் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலோ அல்லது கூட்டணியிலோ இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையான நிலைப்பாட்டை அறிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்த முக்கிய தலைவர்கள் மாற்று கட்சிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மனோஜ் பாண்டியன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் இன்று திமுகவில் இணைந்தார்.ஆரம்ப காலத்தில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி வருவதால் ஓ.பி.எஸ் கூடாரம் காலியாகும் சூழல் உருவாகியுள்ளது. அடுத்து அவர் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related News

Latest News