தொலை தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வு குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி இருந்து வரும் நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்த விலை ரூ.189 ரீசார்ஜ் பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பிளானை பயன்படுத்தி வந்த பிரீபெய்ட் பயனர்கள் இனி குறைந்தபட்சம் ரூ.199 பிளானை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முந்தைய ரூ.189 பிளானில் 1GB டேட்டா, அன்லிமிடெட் கால், 300 SMS, மற்றும் 21 நாட்கள் வலிடிட்டி இருந்தது. ரூ.199 பிளானில் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், மற்றும் 100 SMS தினசரி வழங்குகிறது. முக்கியமாக, இதன் வலிடிட்டி 28 நாட்கள், அதாவது முந்தைய பிளானைவிட 7 நாட்கள் அதிகம். மொத்தத்தில், ஏர்டெல் ரூ.189 பிளானை நிறுத்தியதால், பயனர்கள் இனி ரூ.199 பிளானைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
