இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.இப்படம் சந்திரமுகிக்கு அடுத்தபடியாக திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது
முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
தஹா மலையாளத்தில் இயக்கி வெற்றி பெற்ற ‘இ பறக்கும் தள்ளிகா’ என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது. இந்த திரைப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும்..
இந்த திரைப்படத்தின் மூலம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது இப்படத்தினை மெருக்கேற்றி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளார்கள்.
மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரீ-ரிலீஸ் திரைப்படங்கள் அதிக வெற்றியை பெற்று வருவதால் சுந்தரா டிராவல்ஸ்-க்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றிக்கரமாக திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது