Friday, December 27, 2024

பொன்னியின் செல்வனுக்கு ‘positive review’ கொடுத்தவரை வறுத்தெடுத்த மணி ரத்னம் மனைவி

உலக முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ள பொன்னியின் செல்வன் பெரும்பான்மை பாராட்டுகளையும் பரவலான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. பல முன்னணி சினிமா விமர்சகர்களும், மணி ரத்னத்தின் இயக்கத்தையும் படத்தின் பிரம்மாண்டத்தையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஆனால், ஒரு விமர்சகர் மட்டும் படத்தை பாராட்டியதால் மணி ரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினியிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டார். காரணம், படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் செப்டம்பர் 27 அன்றே அவர் படம் பார்த்தது போல ட்விட்டரில் பதிவிட்டது தான்.

தன்னை சர்வதேச சினிமா விமர்சகராக அடையாளப்படுத்தி கொள்ளும் உமைர் சந்து, பொன்னியின் செல்வன் சிறப்பான சினிமா அனுபவமாக இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். யார் நீங்கள்? வெளிவராத படத்தை பார்க்க உங்களுக்கு எப்படி அனுமதி கிடைத்தது என சுஹாசினி அவரின் ட்வீட்டுக்கு பதிலாக காட்டமாக பதிவிட்டது சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Latest news