ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்குமா? இந்த ஒரு கேள்விதான், இப்போது இந்திய அரசியலில் ஒரு பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணையில், ஒரு முக்கியமான திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
நடந்தது என்ன? ஒரு சின்ன ரீகேப்…
2019-ல், ஆர்ட்டிகள் 370-ஐ நீக்கி, ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை எடுத்து, அதை யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். போன வருஷம், உச்ச நீதிமன்றம், “தேர்தலை நடத்தி, மாநில அந்தஸ்தை திரும்பக் கொடுங்கள்,” என்று ஒரு வரலாற்றுத் தீர்ப்பைக் கொடுத்தது. அதன்படியே, தேர்தல் முடிந்து, உமர் அப்துல்லா முதல்வராகவும் ஆகிவிட்டார். ஆனால், மாநில அந்தஸ்து இன்னும் கிடைக்கவில்லை.
இப்போது புதிய வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
“தேர்தல் எல்லாம் அமைதியாக முடிந்துவிட்டது. இனியும் தாமதிக்காமல், மாநில அந்தஸ்தைக் கொடுங்கள்,” என்று சொல்லி, சமூக ஆர்வலர்கள் சிலர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவைப் போட்டார்கள். ஆனால், இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
“சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நாம் மறந்துவிடக் கூடாது. கள எதார்த்தத்தைப் புறக்கணிக்க முடியாது,” என்று நீதிமன்றம் கூறியிருப்பது, இந்த வழக்கில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த மனு தொடர்பாக, 8 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.