Thursday, December 26, 2024

திடீரென பரவும் தட்டம்மை! குழந்தைகள் கட்டாயம் போட வேண்டிய தடுப்பூசிப் பட்டியல்

மும்பையில் திடீரென பரவி வரும் தட்டம்மை நோயினால் இதுவரை கிட்டத்தட்ட 12 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ரூபெல்லா என்றும் அழைக்கப்படும் இந்த தட்டம்மை நோய் தொற்று பாதித்த நபரின் இருமல் மற்றும் தும்மலில் இருந்து பரவுகிறது.

காய்ச்சல், இருமல், தொண்டை கட்டல், மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளுடன் பெரியவர்கள் சமாளிக்கும் இந்த நோய் சிறு குழந்தைகளுக்கு உயிர்கொல்லியாக மாறுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாகிறது.

நோய் பாதித்து 10 முதல் 14 நாட்கள் வரை இருக்கும் இந்த நோய்  வராமல் தடுக்க குழந்தை பிறந்து 12இல் இருந்து 15 மாதங்களுக்குள் MMR தடுப்பூசியின் முதல் டோசையும், 4இல் இருந்து 6 வருடத்திற்குள் இரண்டாவது டோசையும் செலுத்த வேண்டும்.

இது மட்டுமில்லாமல் பட்டியலிடப்பட்டுள்ள தடுப்பூசிகளை சரியாக போடுவதன் மூலம் குழந்தைகளை பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க முடியும். பிறந்த குழந்தைக்கு ஆறு மாதங்கள் நிறைவடைவதற்குள் காசநோய்க்கு எதிரான BCG தடுப்பூசி செலுத்த வேண்டும்.

குழந்தைக்கு ஆறு வாரம், பத்தாவது வாரம் மற்றும் 14வது வாரத்தில் டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ், ஹெப்பாடிட்டீஸ் B, Haemophilus influenza மற்றும் போலியோ நோய்க்கு எதிரான six in one combination தடுப்பூசியை செலுத்த வேண்டும்.

இதற்கான பூஸ்டர் டோஸ்களை 15வது மாதம் மற்றும் ஐந்து வயதின் போது செலுத்த வேண்டும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எளிதாக கிடைக்கும் நியூமோகோக்கல் தடுப்பூசியை குழந்தைகள் செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு, சின்னம்மை, Hepatitis A மற்றும் typhoid ஆகிய நோய்களை, குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனையின் அடிப்படையில் முறையாக தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news