Friday, December 27, 2024

திடீரென மரிக்கும் குழந்தைகள்!

குழந்தையின் திடீர் மரண கூட்டரிகள் இதை ஆங்கிலத்தில் SUDDEN INFANT  DEATH SYNDROME என்று கூறுவார்கள்,இது ஒரு வயதுக்கும் குறைவான வயதினை உடைய குழந்தைகளின் திடீர் மரணமாகும்,இது எதனால் நிகழ்கிறது என்பது உடல் பரிசோதனை மற்றும் பிரேதபரிசோதனை பின்பும் கண்டறியப்படாத ஒன்றாகும்.இந்த திடீர் மரணம் சில வேளைகளில் “தொட்டில் மரணம்” எனவும் அழைக்கப்படும்,ஏன் என்றால் இந்த நோயினால் மரணமடையும் குழந்தைகள் அவர்களது தொட்டில்களில் தான் இறந்திருக்கிறார்கள்,இருப்பினும் இதற்கு தொட்டில்கள் தான் காரணம் என்று அறியப்படவில்லை.

1990களில் தேசிய மற்றும் சர்வதேச பிரச்சாரங்களில் குழந்தைகளை மல்லாந்து தூங்க வைக்கும்படி அறிவுரை கொடுத்தார்கள்,அப்படி செய்ததால் இந்த நோயின் 100%  இறப்பு 50%மாக குறைந்தது.

ஐக்கிய அமெரிக்காவில் இந்த நோய்க்கு இன்னும் பலியாகிறார்களாம்,இதில் பெண் குழந்தையை விட ஆண் குழந்தைகளே அதிகமா பாதிக்கப்படுகின்றனர் .

இது எதனால் நிகழ்கிறதென்ற காரணம் இன்னும் கண்டறியப்படாவிட்டாலும் குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளுக்கான நியாயமான காரணம் இது வரை அறியப்படவில்லை குப்பறப் படுத்து நித்திரை செய்தல், புகை பிடிப்பவர்களிடமிருந்து வரும் புகை, அளவுக்கதிகமான சூடு, குறைமாதப் பிரசவம், எடை குறைவாகப் பிறத்தல், மற்றும் தாய்மாரின் இளம் வயது போன்ற பெரும் எண்ணிக்கையான ஆபத்தான காரணிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ,இதனை தடுக்க நேராகப் படுத்து நித்திரை செய்தல்,மென்மையான மெத்தைகள், படுக்கைகள், மற்றும் தலையணைகளைத் தவிர்த்தல்,அளவுக்கதிகமான சூட்டைத் தவிர்ப்பது போன்றவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யவேண்டும்.

Latest news