சசி குமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ’சுப்ரமணியபுரம்’ படத்தில் மொக்கை சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் முருகன்.
மதுரை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 78. அவரது மறைவிற்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் முருகன் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலைக்கடை வைத்து நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.