நடுவானில் நிகழ்ந்த  விபரீதம்-அதிர்ச்சி காட்சிகள்

454
Advertisement

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த உறவினர்களான லூக் ஐகின்ஸ் மற்றும் ஆண்டி ஃபாரிங்டன் ஆகியோர் அரிசோனாவின் நடுவானில்  ரெட் புல்லுக்கு இதுவரை கண்டிராத ஸ்டண்ட் ஒன்றை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி ,எப்ரல் 24 ஆம் தேதி வானில் இந்த சாகசத்தை நிகழ்த்த அனைத்தையும் தயார் செய்தனர்.இதுவரை யாரும் செய்திடாத சாகசமாக , நடுவானில் இரு விமானங்களில் இருந்து இரு விமானிகளும் ஒருவருக்கொருவர்  விமானத்தை மாற்றிக்கொள்வது என்பது தான் அவர்களின் திட்டம்.

நடுவானில் விமானத்தின் இன்ஜினை ஆப் செய்துவிட்டு விமானத்தின் மூக்கு பகுதி முன்னோக்கி விழும்போது , விமானிகள் வெளியே குதித்து ஒருவருக்கொருவர் விமானத்தை நோக்கி  ஜன்னல் வழியாக மற்ற விமானத்திற்குள் நுழைந்து, பின்னர் விமானத்தை பத்திரமாக தரையிறக்க வேண்டும்.

ஆனால், திட்டமிட்டபடி ஸ்டண்ட் நடக்கவில்லை. இரு விமானங்களிலும் ஏர்பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்ட நிலையில் இருவரும் 12,100 அடி உயரத்தில் அந்தந்த விமானத்தில் இருந்து குதித்தனர்.

நினைத்தபடி ,விமானம் எதிர்பார்த்த திசையில்  குறிப்பிட்ட நேரத்தில் விமானத்தை அடையாத இருவரில் ஒருவர் ,பேராசூட்டை பயன்படுத்தி கீழே தரையிறங்கினார். நடுவானில் விடப்பட்ட்ட இரு விமானிங்களில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 12,100 அடில் இருந்து கீழே விழுந்து தொரிங்கியது.

அதிர்ஷ்டவசமாக விமானிகள் இருவரும் பத்திரமாக தரையிறங்கினர்.அபாயகரமான ஸ்டண்டின் காட்சிகள் ஆன்லைன்  தலமான ஹுலுவில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.நேரலையில்  இந்த ஸ்டன்ட்டைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த விபத்து குறித்து ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) விசாரணை நடத்தி வருகிறது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.