பிரம்மிக்க வைத்த ஆர் ஆர் ஆர்

286
Advertisement

ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் நாள் வசூல் திரைத்துறையை
மட்டுமன்றி, தொழில், வர்த்தகத்துறையையும் பிரம்மிக்க
வைத்துள்ளது.

சுமார் 250 கோடி ரூபாயில் 2015 ஆம் ஆண்டில் ராஜமௌலி
இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட பாகுபலி படம் உலகம்
முழுவதும் வெளியாகி சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும்
அதிகமாக வசூல்செய்து உலக சாதனை படைத்தது.

அதேபோல தற்போது வெளியாகியுள்ள ஆர்ஆர்ஆர்
படத்தின் இந்திப் பதிப்பு முதல் நாளிலேயே 18 கோடி
ரூபாய் வசூலித்துப் பிரம்மாண்ட சாதனை புரிந்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 100 கோடி ரூபாய்
வசூலித்துள்ளது.

தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதா
ராமராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை
வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட கற்பனைக்
கதையான இப்படத்தில் ராம்சரண் அல்லூரி சீதா ராமராஜு
ஆகவும், ஜுனியர் என்டிஆர் கொமரம் பீம் ஆகவும் நடித்துள்ளனர்.

முதல்நாளிலேயே வசூலில் பிரம்மாண்டத்தின் மைல்கல்லை
எட்டியுள்ள.இரத்தம், ரணம், ரௌத்திரம் ஆகிய ஆர்ஆர்ஆர்
திரைப்படம் சுமார் 450 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது.

தமிழ், கன்னட மொழிகள் உள்பட மொத்தம் 5 மொழிகளில்
இந்தியா முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகியுள்ள
ஆர்ஆர்ஆர் படம் இமாலய சாதனையை நோக்கி சென்று
கொண்டிருக்கிறது.

இயக்குநர் இராஜமௌலி சிகரத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்து
மகுடம் சூடிக்கொள்ளத் தயாராகி வருகிறார். இதனால், இராஜ
மௌலியின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு இந்தியாவின்
முன்னணி நடிகர் நடிகைகள் பலர் போட்டிபோட்டு வருகின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.