குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் அடைக்கப்படும் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு மசோதா கொண்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதில் மொத்தமுள்ள 30 முதலமைச்சர்களில், 12 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மீது 89 வழக்குகளும், அடுத்ததாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது 47 வழக்குகளும் உள்ளன. சந்திரபாபு நாயுடு மீது 18 வழக்குகளும், சித்தராமையா மீது 13 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. 10 முதலமைச்சர்கள் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
