எலும்புக்கூட்டை புதைத்த மாணவர்கள்

319
Advertisement

மேற்கு ஜெர்மனிய நகரமான ஷ்லீடனில் (Schleiden) உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தங்கள் சமூகத்தின் முன்னாள் உறுப்பினரை அடக்கம் செய்தனர்.அதாவது அப்பள்ளியில் பல தலைமுறை மாணவர்களுக்கு கல்வி மாதிரியாக உபயோகப்படுத்திய மனித எலும்புக்கூடு தான் அது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 80 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகர அதிகாரிகள் பங்கேற்றனர்,அங்கு எலும்புக்கூடு ஒரு சிறிய சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டன.

புதைக்கப்பட்ட எலும்புக்கூடு ஒரு பெணின் எலும்புக்கூடு.இது கடந்த 1952 முதல் பள்ளியின் உயிரியல் துறையில் வைக்கப்பட்டு இருந்ததாக அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது மேலும் நாங்கள் உண்மையில் பள்ளி சமூகத்தின் ஒரு உறுப்பினரை அவர்களின் கல்லறையில் ஓய்வெடுக்க வைக்கிறோம் என்றும் தெரிவித்தது.

இந்த எலும்புக்கூட்டை அடக்கம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர், ஆனால் அதற்கான திட்டங்கள் தொற்றுநோயால் தாமதமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.எலும்புக்கூடு புதைக்கப்படும் புகைப்படும் இணையத்தில் வைரலாகி வருகிறது.