திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 32வது பட்டமளிப்பு விழாவில், ஒரு மாணவி ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களிடமிருந்து பட்டத்தை வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜீன் ஜோசப் என்ற அந்த மாணவி, ஆளுநரை தவிர்த்து, பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரிடம் தனது பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் அவரிடமிருந்து பட்டத்தை வாங்க விரும்பவில்லை” என அவர் தெரிவித்தார். மேலும், இது குறித்து விரிவாகப் பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.