கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே முழுக்கோடு பகுதியை மாணவி ஒருவர் தனது நண்பர்களுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அந்த மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
பலமுறை கண்டித்த பிறகும் செல்போனில் நண்பர்களுடன் பேசுவதை மாணவி நிறுத்தவில்லை. இந்நிலையில் நேற்று மாணவி வீட்டில் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர்.இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.