விழுப்புரம் மேல் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி . கிராம உதவியாளரான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகனான மோகன்ராஜ் (16) திரு.வி.க வீதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.
இன்று காலை வழக்கம் போல பள்ளியில் நடைப்பெற்ற சிறப்பு வகுப்பிற்கு மாணவர் வருகை தந்துள்ளார். காலை 7 மணிக்கு வகுப்பிற்கு வந்த மாணவன் மோகன்ராஜ் திடீரென ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயக்கமடைநதுள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட தனியார் பள்ளி நிர்வாகம் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் உயிரழந்தவிட்டதாக தெரிவித்தனர். மேலும் மாணவரின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
மாணவர் உயிரிழந்ததையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் எதும் நடைப்பெறாத வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளியில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மாணவரின் இறப்பு குறித்து பள்ளியில் தாளாளர் ராஜசேகர், இன்று காலை சிறப்பு வகுப்பிற்கு வந்த மாணவர் திடிரென மயக்கமடைந்ததால் உடனடியாக மாணவரை மீட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. ஆனால் மாணவர் உயிர்ழந்துவிட்டதாக தெரிவித்தனர். மாணவர் உயிரிழந்தது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்ப்படுத்தியுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் இனி நடைப்பெறாமல் பார்த்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.