வகுப்பில் ரசிக்கும்படியான மாணவி..!

349
Advertisement

நாம் அனைவருமே அதிகம் ரசித்த அல்லது ரசிக்கும் நாட்கள் எதுவென்று கேட்டால் நம் நினைவுக்கு வருவது நம் பள்ளி பருவம் தான். அந்நாட்களில் நம்மை சொர்க்கம் கூப்பிட்டால் கூட போக மருத்துருப்போம்.

வாழ்க்கையை கற்கும் இடமாக பள்ளிக்கூடம் திகழ்கிறது கூடவே மகிழ்ச்சி குறும்பு கலாட்டா என தினம் தினம் சுவாரசியமாக கடந்துபோகும். அதில் பகுதி தான்நம்மில் ஒளிந்திருக்கும் ஓவியம் வரையும் திறமை. ஆசிரியர் அங்கு பாடம் நடத்திக்கொண்டு இருப்பார். இங்கு எதையாவது வரைத்து கொண்டு இருப்போம்.

நம் நினைவுகளை நினைவுகூர செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் ,

ஆசிரியர் ஒருவர் பாடம் எடுத்துக்கொண்டு இருக்கிறார் , மாணவி ஒருவர் அந்த ஆசிரியரை அச்சுஅசல் தன் நோட்ல் வரைந்துள்ளார். அடுத்து நடந்தது தான் ரசிக்கும்படியான தருணம் , வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியே கிளம்பிய பின் , அந்த மாணவி தான் வரைந்த ஓவியத்தை எடுத்துகொண்டு சென்று அந்த ஆசிரியரிடம் கொடுக்கிறார் , அதை வாங்கிய ஆசிரியர் அச்சுஅசல் தன்னை போல் இருக்கும் ஓவியத்தை கண்டதும் முகத்தில் சிரிப்புடன் அந்த மாணவியை பாராட்டுகிறார் அந்த ஆசிரியர்.

https://www.instagram.com/reel/Ca7PkmjgXaU/?utm_source=ig_embed&utm_campaign=loading

“அது நன்றாக இல்லை, ஆனாலும் அவள் அதை விரும்பினாள்” என்ற தலைப்புடன் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.மாணவின் இந்த திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.