தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கின்றது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதகாலம் தான் இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கோவையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் நடனமாடி விழுப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது ஒரு மாணவி விசில் அடித்துக்கொண்டு நடனமாடிக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென தேர்தல் அதிகாரி மேடையேறி மாணவி கையில் வைத்திருந்த விசிலை பிடுங்கிவிட்டார். இதனால் அந்த இடத்தில சற்று சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு ஒருபக்கம் விஜய் ரசிகர்களும் அவரின் ஆதரவாளர்களும் கலவையான கருத்துக்களை வழங்கி வருகின்றனர்.
