Thursday, October 2, 2025

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டீர்களா? உயிர் தப்ப சில வழிகள் இதோ! நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்!

சமூக, அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளில் பெரும்பான்மையான மக்கள் திரண்டபோது கூட்ட நெரிசல் ஏற்படுவது இயல்பு. சில நேரங்களில் கட்டுப்பாடுகள் இல்லாமல் மக்கள் முன்னேறும்போது விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகளும் சம்பவிக்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எவ்வாறு பாதுகாப்பாக தப்பிக்கலாம் என்பது குறித்து பாதுகாப்பு நிபுணர்கள் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

முதலாவது, கூட்டம் அதிகரிக்கும் தருணங்களில் அமைதியை காக்க வேண்டும். பீதி அடையாமல் சிந்தனையுடன் செயல்படுவது அவசியம். கூட்டம் நெருக்கும்போது, boxing போடுவதை போல கைகளை மார்பின் முன் வைத்துக்கொள்ள வேண்டும். இது மூச்சு விட உதவியாக இருக்கும்.

இரண்டாவது, கூட்டத்தில் செல்லும் வழியில் தப்பும் வாய்ப்புகளை முன்னரே கவனத்தில் கொள்ள வேண்டும். சுவர், கதவு, படிக்கட்டு போன்ற இடங்களை பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர நேரத்தில் அந்த பகுதிகளை தவிர்ப்பதன் மூலம் எளிதில் வெளியேற முடியும்.

மூன்றாவது, ஒருவர் தரையில் விழுந்தால் உடனே எழுந்து நிற்க முயற்சிக்க வேண்டும். முடியாவிட்டால் முழங்காலில் சுருண்டு, தலைக்கும் முகத்திற்கும் கைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கூட்ட நெரிசலிலிருந்து விலகிச் செல்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். செல்போனில் படம் எடுப்பது, வீடியோ எடுப்பது போன்ற கவனச்சிதறலைத் தவிர்க்க வேண்டியது அவசியம். கூட்டம் கட்டுப்பாடின்றி நகர தொடங்கினால் கூட்டம் போகும் பாதையிலேயே சென்று வெளியேறுவதற்கான பாதையில் நகர வேண்டும்.

நிபுணர்கள் கூறுவதாவது, ‘கூட்ட நெரிசலில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அமைதியும் விழிப்புணர்வும் மிக முக்கியம். பீதி அடையாமல், தப்பும் வழிகளை முன்கூட்டியே கவனித்தால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News