Thursday, December 25, 2025

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் வீசப்போகும் பலத்த தரைக்காற்று

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மிக பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் போது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்ட்ர் வேகத்திலும், சில சமயம் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

13 மாவட்டங்களில் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், சில சமயம் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பலத்த காற்று வீசலாம் என கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News