டெல்லியில் இன்று அதிகாலை 5.36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
இதையடுத்து டெல்லி மற்றும் அதனையொட்டி உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.