Tuesday, September 9, 2025

திண்டுக்கல் அருகே மூன்று வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்

திண்டுக்கல் அருகே மூன்று வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டைமேட்டை சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது மூன்று வயது குழந்தை முகமது ரியான் வீட்டிற்கு வெளியே விளையாடியுள்ளான்.

அப்போது, அந்த வழியாக வந்த தெரு நாய்கள் சிறுவன் முகமது ரியனை கடித்து காயப்படுத்தி உள்ளது. முகமது ரியானின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த வந்தவர்கள் நாய்களை விரட்டி குழந்தையை காப்பாற்றியுள்ளனர். இதில் முகம் மற்றும் காது பகுதிகளில் பலத்த காயமடைந்த சிறுவன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பழனி பகுதியில் அடிக்கடி தெரு நாய்கள் சாலையில் செல்பவர்களையும், வாகனத்தில் செல்பவர்களையும் விரட்டிச் சென்று கடிக்கும் சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News