Saturday, May 10, 2025

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ரூ. 2.40 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகள் உலக நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன.

தமிழகத்திலிருந்து மட்டும் ஆண்டுதோறும் ரூ.8,000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடி வரையிலான மதிப்புடைய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியும், தேச நலனைக் கருத்தில் கொண்டும் பாகிஸ்தானுக்கு மருந்து மற்றும் மூலப்பொருள் ஏற்றுமதியை நிறுத்துவதாக தமிழக மருந்து உற்பத்தியாளா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனர்.

Latest news