குஜராத் மாநிலத்தில், பாலியல் வன்கொடுமையை தவிர்க்க பெண்கள் வீட்டிலேயே இருக்கும்படி அகமதாபாத் போக்குவரத்து போலீசார் போஸ்டர் ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத் போக்குவரத்து போலீஸ் சார்பில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்களில், நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் பார்ட்டிகளில் பங்கேற்காதீர்கள், நீங்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படலாம். இருட்டான ஆள்டமாட்டமற்ற பகுதிகளுக்கு பெண் நண்பர்களை ஆண் நண்பர்கள் அழைத்து செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார் ஒட்டிய போஸ்டர்களால் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆளும் கட்சியான பாஜகவுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.