அரச மாளிகையில் உலாவிய அமானுஷ்ய பேய்கள்! ராணி எலிசபெத் கண்ட மர்ம உருவங்கள்

373
Advertisement

இங்கிலாந்தை நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த செப்டம்பர் மாதம் தனது 96வது வயதில் காலமானார்.

இந்நிலையில், பெயர்பெற்ற அரச மாளிகையான Windsor Castleஇல் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தும் அவரின் தங்கை இளவரசி மார்கெரெட்டும் ஆவிகளை பார்த்ததாக ஆய்வறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Windsor Castleஇல் நிலவிய அமானுஷ்ய சூழலால் ராணி இரண்டாம் எலிசபெத் அச்சப்படவில்லை என்றும், அது கடைசிவரையில் அவருக்கு பிடித்த இடமாகவே இருந்ததாக கூறப்படுகிறது.

தன்னுடைய மூதாதையரான ராணி எலிசபெத் வெறும் கால்களில் நடந்து வருவதை தான் கேட்டதாகவும் அவரின் உருவத்தையும் பார்த்ததாகவும், ராணி இரண்டாம் எலிசபெத் பகிர்ந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது மட்டுமில்லாமல், மன்னர் ஜார்ஜின் உருவத்தை நூலகத்தின் கீழ் உள்ள அறையில் காண முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Windsor Castleஇல் பல மறைந்த அரசர்கள், அரசிகள், ராணுவ வீரர்கள் போன்ற பல மர்ம உருவங்களை பலரும் கண்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.